×

அரசு மருத்துவமனைகளில் ஞாயிறு தவிர தினமும் ஒரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள்: சுகாதாரத்துறை முடிவு

 

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற படுக்கை விரிப்புகள் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, புதிய படுக்கை விரிப்புகளாக இருக்க வேண்டுமென்று அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது திங்கட்கிழமை பிங்க் கலர், செவ்வாய்க்கிழமை அடர்புளு கலர், புதன்கிழமை மெரூன் கலர், வியாழக்கிழமை வைலட் கலர், வெள்ளிக்கிழமை கிரீன் கலர் மற்றும் சனிக்கிழமை லைட்புளூ கலர் ஆகிய 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் இந்த திட்டம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அதே போல், ராஜிவ் காந்தி மருத்துவமனைசமையலறை ரூ.81 லட்சம் செலவில் நவீன சமையலறையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கி சப்பாத்தி செய்யும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது, இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 சப்பாத்திகள் வரை சமைக்க முடியும். மேலும், உள்நோயாளிகள் சுமார் 3,000 பேர் பயன்பெறும் வகையில், மூன்று வேளைகளிலும் என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்று ஒவ்வொரு வார்டிலும் வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

The post அரசு மருத்துவமனைகளில் ஞாயிறு தவிர தினமும் ஒரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள்: சுகாதாரத்துறை முடிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Government Medical College ,Health ,Dinakaran ,
× RELATED நெல்லையில் உள்ள உணவகத்தில்...